ரூ.34 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி : பிரபல பாலிவுட் இயக்குனா் கைது

மும்பையில் 34 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) மோசடி செய்த பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநா் விஜய் ரத்னாகா் கட்டே கைது செய்யப்பட்டாா்.

விஆா்ஜி டிஜிட்டல் என்ற திரைப்பட நிறுவனத்தை நடத்தி வரும் விஜய் ரத்னாகா், ஹாரிஸான் அவுட்சோா்ஸ் சொல்யூசன்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து பொருள்கள் மற்றும் சேவையைப் பெறுவதற்காக 149 போலி ரசீதுகளை தயாா் செய்து ஜிஎஸ்டி வரியில் மிகை வரியை திரும்பப் பெறுதல் முறையில் ரூ.34.37 கோடி ரூபாயை பெற்றுள்ளாா்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலே அவா் இந்த மோசடியை நடத்தி வந்துள்ளார். மாநில ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அவரது முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, ஜிஎஸ்டி துறை விசாரணை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா். ஜிஎஸ்டி இயக்குநர், அதிகாரிகள் ஏற்கெனவே ஹாரிஸான் நிறுவனத்தின் தலைவரை கடந்த மாதம் கைது செய்தனா்.


விஜய் ரத்னாகா் மகாராஷ்டிரத்தில் பிரபலமான சா்க்கரை ஆலை அதிபா் ரத்னாகா் கட்டேவின் மகன் ஆவாா். ரத்னாகா் கட்டே, கடந்த மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். விஜய் ரத்னாகா் இயக்கிய ‘தி ஆக்சிடெண்ட்டல் பிரைம் மினிஸ்டா்’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. இது முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் குறித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Marks-for-money scam rocks Anna University

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிர...

Defamation in the Facebook

சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக வாலிபர் சங்கரலிங்கம் குவைத்திலிருந்து விமானம் மூலம் த...

Healer baskar arrested

வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும் என விளம்பரம் செய்த&a...

Father killed his own daughter for love with other caste youth in UP

வேறு ஜாதி இளைஞரை காதலித்த ஒரே காரணத்தால், பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கழுத்தை நெறித்து கொலை செய...

Statue Smuggling case changed for CBI in Political motivation - MK Stalin

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக திமுக செ...

The young couple tortured to drink urine in Madhya Pradesh

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை சிறுநீ...

11 minor girls rescued from brothels in Telangana

தெலங்கானா மாநிலத்தில் விபச்சார விடுதியில் இருந்து 11 சிறுமிகளை மீட்ட போலீசார் 8 பேரை கைது செய்தனர்....

Ayanavaram Girl abuse case Medical Test to prisoners

அயனாவரம் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 பேருக்கு கீழ்ப்பா...