கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும்- நடிகர் சிவக்குமார் உருக்கம்

பெரியார், ராஜாஜிக்கு பிறகு புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும் என நடிகர் சிவக்குமார் உருக்கம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவக்குமார் விடுத்த இரங்கல் குறிப்பில், "டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் பெரியார் , ராஜாஜிக்கு பிறகு  95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர்  கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
 
பெரியார் - எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்.
 
அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக்காத்தவர் . அரசியலில் சாதித்ததற்கு இணையாக - கலை இலக்கியத்திலும்  60 ஆண்டுகளுக்கு மேல்  சாதனை புரிந்தவர் .
 
1950 களில்  தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர் .குறளோவியம் , சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா - போன்றவை அவரது புலமைக்குச்சான்றானது .
 
 பாசப்பறவைகள் , பாடாத தேனீக்கள் - அவர் வசனம் பேசி நடித்தேன் .
என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார் .
 
 சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் - கார்த்தி- முதல் படம் பருத்திவீரன் பார்த்து ஆசி கூறியவர் .தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும் . அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்". எனக் குறிப்பிட்டுள்ளார்.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Speacial article on DMK leader Karunanidhi

தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா மறைந்ததை அடுத்து, மு. கருணாநிதி முதல் அமைச்சர் பதவிக...

Karunanidhi death RIP the actors association

முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இ...

Tamil Nadu government denies Karunanidhi in Anna Samadhi

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது....

Karunanidhi's death ... DMK party flag in half poll

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து, அக்கட்சி கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.&a...

Dmk Leader Karunanidhi Dead today in Hospital

திமுக தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்......

DMK leader Karunanidhi passed away today in kauvery hospital

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று க...

Movie scenes canceled across Tamilnadu

திமுக கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், தற்போது முதல் நாளை வரை தமிழகம் முழுவதும...