பிக்பாஸ் சீசன் 1 ஆரவின் அடுத்தப் படம் - ராஜபீமா.

பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவர்கள் ஏராளம் இதில் ஆரவ் குறிப்பிடத்தக்கவர். தற்போது பிக்பாஸ் 2 ல் சிறப்பு விருந்தினராக தற்போது கலந்து கொண்டுள்ளார். அவரது அடுத்தப்படம்  ராஜபீமா என அறிவித்துள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் திரு.நரேஷ் சம்பத்.இப்படத்தைப் பற்றி கேட்டப்போது,அவர் " மனிதனுக்கும் விலங்குக்கும் இடையேயான உறவு" இப்படம் என்றார். மேலும் ஆரவ் "இது மிகவும் வித்தியாசமான கதைக் கலம் கொண்ட படம் எனவும் இதில் என்னுடைய கதாப்பாத்திரம் வியப்பானது" என்றார். இந்தப் படத்தில் யானை முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. அதோடு கிராமத்தை மையமாக கொண்ட படம் இது இல்லை, முழுக்க முழுக்க கமர்சியல் படம் .

இத்திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு பாலக்காட்டில் நடந்துள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடக்கயிருப்பதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக ஆரவ் தெரிவித்தார்.இத்திரைப்படத்திற்கான கதாநாயகி இன்னும் அறிவிக்கப்படவில்லை.அது சப்ரைஸ் எனக் கூறி சென்றார் ஆரவ்.

ஒரு வேலை ஓவியா இருக்குமோ...

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

Tag Clouds