போராளியாகவே மாறிய விஜய்சேதுபதி, கிச்சா சுதிப்!

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில், விஜய்சேதுபதி, கிச்சா சுதிப் இணைந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

டோலிவுட்டில் பாகுபலியை தொடர்ந்து மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட ஒரு போராளியின் நிஜ கதையை படமாக்கி வருகின்றனர்.

இப்படத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, கிச்சா சுதிப் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். ஜார்ஜியாவில் மிகப்பிரம்மாண்டமாக படத்தின் போர் காட்சி ஒன்று 45 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு வருகின்றது.

இப்படத்தின், ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா சென்றுள்ள விஜய்சேதுபதி மற்றும் கிச்சா சுதிப் ஆகிய இருவரும் ஆளே அடையாளம் தெரியாத வகையில் நீண்ட முடியுடன், திருநீரு மற்றும் குங்குமம் அணிந்து போராளிகளாக காட்சியளிக்கின்றனர்.

இந்த புகைப்படம் தற்போது, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழில் கலக்கி வரும் விஜய்சேதுபதி, இப்படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அங்குள்ள ரசிகர்களையும் கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

Tag Clouds