ஆட்டுக்கால் பாயா எப்படி செய்றது பார்க்கலாம் வாங்க..

இன்னைக்கு நாம அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான ஆட்டுக்கால் பாயா எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா ?
 
தேவையான பொருட்கள்:
 
ஆட்டுக்கால் – 8
முந்திரி பருப்பு – 8
மைதா – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
மல்லித்தழை , கறிவேப்பிலை – சிறிது
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2 (பெரியது)
மிளகுத்தூள் – 1
தேக்கரண்டிசீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – 4 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு 
 
செய்முறை:
 
முதலில் வெங்காயம், தக்காளி, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ஆட்டுக்காலை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
 
பின் ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.கொதி வந்த பின்பு குக்கரை மூடி 2-3 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். இளங்காலாக இருந்தால் அரைமணி நேரம், சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரம் வைத்து வேக வைக்கவும் கால் வெந்தவுடன் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
 
அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி சால்னாவில் சேர்க்கவும். சுவையான சத்தான ஆட்டுக்கால் பாயா ரெடி..

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Super mysore bonda recipe

கார ஸ்நாக்ஸ் வகைகளில் பஜ்ஜி, போண்டா போன்றவை தான் சாப்பிட பெஸ்ட்னு சொல்லலாம்......

Super lunch recipe Fish fried rice recipe

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரைட் ரைஸ் என்றால் விருப்பம் தான்.. ...

Healthy drumstick leaves egg podimas recipe

உடலுக்கு சத்து தரும் முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.....

Tasty Paal kova recipe

சிம்பிள் இன்கிரிடின்ஸ் வெச்சி ஈஸியான பால் கோவா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.....

Yummy egg biriyani recipe

அவசரத்துக்கு சிக்கன், மட்டன் கிடைக்கலையா.. நோ பிராப்லம்.. அதற்கு நிகரான சுவையில் முட்டை பிர...

Superb evening snacks potato vada recipe

சூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் உருளைக்கிழங்கு வடை ரெசிபி எப்படி செய்றதுனு பார்ப்போம்.....

Ramzan special mutton biriyani recipe

இன்னைக்கு நாம ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி எப்படி செய்றதுன்னு .பார்ப்போம்.....