மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு

பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண சிங் மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Harivansh Narayan Singh

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியன் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனால், காலியாக இருந்த அந்த பதவிக்கு நடப்பு கூட்டத்தொடரில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஹரிவன்ஷ், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரிபிரசாத் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தபோதும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. எனவே பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயன்றது.

இந்நிலையில், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்றார். இதனால் ஹரிவன்ஷ் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

President approves Bill aimed at deterring economic offenders from fleeing country

இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடுவதை தடுக்கவும் அத்தகைய நபர்கள் மீது சட்...

Are Possible to Petroleum products in GST

பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வரவேண்டும் என்பதே மத்திய அரசு மற்றும் பெட்ரோலிய அமைச்சக...

Stalin Tweeted Reservation Bill for Women

மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல் தலை...

 Parliament Monsoon Session will Starting from Tomorrow

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது....

Will property Complaint on O. Panneerselvam?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தி...

Compassionate marks for NEET Tamil Exam - High Court Madurai Bench order

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுர...