தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனோபாவம் கொண்டவர் மோடி - ராகுல் காந்தி

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனோபாவம் கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Rahul Gandhi-Modi

எஸ்சி, எஸ்டி சட்டத்தில் நீதிமன்றம் திருத்தம் செய்யப்பட்டதற்கு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் நலனில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கவலையில்லை என குற்றம்சாட்டினார்.

‘ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்கள் நலனில் பிரதமருக்கு அக்கறையிருந்ததால், அவர்களுக்கு ஆதரவான கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும்.’

‘எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் போன்றவை என்னுடைய தந்தை ராஜீவ் காந்தி ஆட்சியில் இருக்கும் போது, அவர் பிரதமாக இருக்கும் போது கொண்டுவரப்பட்டது.’

‘ஆனால், அந்தச் சட்டங்களை எல்லாம் இப்போது நீர்த்துப்போகச் செய்ய பிரதமர் மோடி அனுமதிக்கிறார். எஸ்சி, எஸ்டி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக உத்தரவுகளைப் பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதவிஉயர்வு அளிக்கப்பட்டுள்ளது.”

“எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம், தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். தலித்துகளுக்கு எதிரான சிந்தனையுடன் இருக்கும் மோடிக்கும், பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்அமைப்புக்கும் எதிராக நாடே எழுந்து நிற்க வேண்டும்.” என பேசினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்துக்கு அமித் ஷா டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்த ராகுல் காந்தி அமித் ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இருவருக்குமான கருத்துமோதல் தொடர்கிறது.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Rahul Gandhi demand rejection

வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரத்தில் ராகுல் காந்தி கோரிக்கை வைத்தபடி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ...

Karunanidhi's body buried with state honor

சென்னை, மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் 21 குண்டுகள் முழங்க மறைந்த திமுக தலைவர்...

Rahul Gandhi to expose the corruption of the BJP government

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்துவோம் என காங்கிரஸ் கட்சி தலைவ...

Rajasthan assembly election amit shah gaurav yatra

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக யாத்திரை பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ...

Improvement in Karunanidhi health: Today he sat in the chair

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆறாவது நாளான இன்று நாற்காலியில்...

Rahul Gandhi visits Karunanidhi in Kauvery Hospital.

திமுக தலைவர் கருணாநிதி தமிழக மக்களை போலவே மன உறுதியுடன் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கா...

piyush goyal criticises rahul gandhi on commenting over swiss money

piyush goyal criticises rahul gandhi on commenting over swiss money