கேரளாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு எதிரொலி: 26 பேர் பலி

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கனமழை பெய்துவருகிறது. 15 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் பல சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதை அடுத்து, திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் களத்தில் இறங்கி உள்ளனர்.

கேரளாவில் பெய்த கனமழை எதிரொலியாக, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் எதிரொலியாக, பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Rs 5 crore relief fund for Kerala TN Chief Minister Announcement

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப...

26 years later the Idukki dam was full

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவ...

Flood warning in 6 districts

கர்நாடகா மாநிலத்ல் வெளுத்து வாங்கும் கனமழை எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட மக்களுக்கு வெள்ள அப...

A Man entered in kerala government house with knife in Delhi

டெல்லியில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தில் கத்தியுடன் உலா வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது....

opposition parties of up are joined together against bjp

நாடாளுமன்றத் தேர்தலை வென்றுவிடும் முனைப்பில் உள்ள பாஜக அரசை எதிர்கொள்ள மாநில வாரியாக எதிர்கட்சிகள் ஒ...

water level at idukki dam is to reach its maximum level

26 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கேரளாவின் இடுக்கி அணை நிரம்ப உள்ளதால் அணையை ஒட்டியுள்ள மக்கள...