தாமதமாக கிடைத்த நீதி: வெறுப்பால் இளைஞர் செய்த செயல் !

கோவாவில் காவல்துறையினர் மீது ஏற்பட்ட வெறுப்பால் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தனது இருசக்கர வாகனத்தை ஒருவர் எரித்த காட்சி வைரலாகி வருகிறது.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு இருசக்கர வாகனத்தை, ஹெல்மட் அணிந்தபடி அங்கு வந்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரிக்கிறார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனத்தை எரித்தவர் சவன்த்வாடியை சேர்ந்த அன்வர் குரு என்பது தெரியவந்துள்ளது. போலி ஆவணம் வைத்திருந்ததாக கூறி அவரது இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் 7 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த வழக்கில் அன்வர் மீது குற்றம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து அவரது வாகனத்தை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். 7 ஆண்டுகள் இழுத்தடிப்புக்குப் பின் தரப்பட்டதால் காவல்துறையினர் மீது எரிச்சலடைந்த அன்வர் தனது சொந்த வாகனத்தையே தீயிட்டுக் கொளுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இது கூறித்து பேசிய அன்வர் எனக்கு பிடித்த பைக் அது மிகவும் ஆசையாக வாங்கினேன் ஆனால் போலி ஆவணங்கள் வைத்து இருப்பதாக கூறி என் மீது வழக்கு தொடுத்தார்கள் இந்த வழக்கு 7 ஆண்டுகள் நடைபெற்றது இதில் நான் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன்.

கடந்த ஏழு ஆண்டுகளில், எனது உடல்நிலை மோசமடைந்தது இருந்தபோதிலும் நான் ஒரு நீதிமன்ற தேதியை தவறவிட்டதே இல்லை.

இந்த வழக்கில் சாட்சிகளில் ஒருவர் விபத்தில் இறந்தார், சாட்சிகள் ஒரு முறை கூட நீதிமன்றத்திற்க்கு வரவில்லை இதனால் நான் நீதிமன்றத்திற்கு முன் கிரிமினலாக தெரிய ஆரம்பித்தேன்,  மூன்று நீதிபதிகள் மாற்றப்பட்ட பின்னரும் இந்த விசாரணை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

இது ஒரு எளிய வழக்கு, நீண்ட காலம் எடுத்தது என்று அன்வார் கூறுகிறார்.

மேலும் "நான் அந்த பைக்கை 7 ஆண்டுகள் ஓட்ட முடியவில்லை, தினமும் அதைப் பார்ப்பது ஏமாற்றமளிக்கும், சோதனையை நினைவுகூரும் அதனால் தான் எரித்தேன் இப்பொழுது நான் இலகுவாக உணர்கிறேன் என்று கூறினார், தாமதமான நீதி ஒரு மனிதனை இந்த அளவிற்க்கு வெறுப்படைய செய்து இருக்கிறது.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

Tag Clouds