செப்டம்பரில் முடியும் விசா: இளம் இந்திய வீரரை தக்க வைக்குமா இங்கிலாந்து?

பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடி வரும் இந்திய இளம் வீரர் ஸ்ரேயாஸ் ராயலை தொடர்ந்து இங்கிலாந்தில் வசிக்க ஏற்பாடு செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பெங்களூருவை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங். இவரது மனைவி அஞ்சு சிங். இந்த தம்பதியரின் மகன் ஸ்ரேயாஸ் ராயல். டாட்டா நிறுவனம் ஒன்றில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறார் ஜிதேந்திர சிங். மகன் ஸ்ரேயாஸூக்கு மூன்று வயதாயிருந்தபோது, இங்கிலாந்தில் பணியாற்றும்படியாய் ஜிதேந்திர சிங்கை அவரது நிறுவனம் அனுப்பி வைத்தது. மனைவி மற்றும் மகனுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சென்று அங்கு கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார் அவர்.
 
 இங்கிலாந்தில் வளர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ராயல், அங்கு சதுரங்க பயிற்சி எடுத்து, போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். பல செஸ் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஒன்பது வயது ஸ்ரேயாஸ், அவரது வயதில் உலக தரத்தில் நான்காவது இடத்தில் உள்ளார். எதிர்காலத்தில் செஸ் சாம்பியனாக வாய்ப்புகள் உள்ள நிலையில், ஸ்ரேயாஸின் தந்தை ஜிதேந்திர சிங்கின் பணிக்கான விசா முடியும் தறுவாயில் உள்ளது.
 
நாடுகளுக்கிடையே பணியாளர்களை பரிமாறிக் கொள்ளும் வழியில் (Intra-Country Transfer:  ICT)குறிப்பிட்ட காலத்திற்கான விசா ஜிதேந்திர சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. அது வரும் செப்டம்பரில் முடிவடைகிறது. தொடர்ந்து அவர் ஆண்டுக்கு 1,20,000 பவுண்ட்டுகள் ஊதியம் பெற்றால் மட்டுமே விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். அவரது நிறுவனம், ஜிதேந்திரா தற்போது பெறும் ஊதியத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பணிபுரியலாம் என்று கூறுகிறது. அவ்வாறு விசா பெறுவதற்கு எந்த வழிமுறையும் இல்லை.
 
தற்போது சர்வதேச அளவில் இங்கிலாந்திற்காக செஸ் விளையாடி வரும் தன் மகன் தொடர்ந்து அங்கு வசிப்பதற்கு வாய்ப்பிருந்தால் நன்றாக இருக்கும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய எதிர்க்கட்சியை சேர்ந்த ரேச்சல் ரீவ்ஸ் மற்றும் மேத்யூ பென்னிகுக் ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இவ்விஷயத்தில் உள்துறை செயலர் ஸாஜித் ஜாவித் தலையிட்டு ஸ்ரேயாஸ் ராயல் தொடர்ந்து இங்கு வசிக்க உதவும்வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளனர்.
 
"உலகின் திறமைசாலிகள், புத்திசாலிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வந்து பணிபுரியும்படியும், இங்கு வாழும்படியும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இங்கிலீஷ் செஸ் பெடரேஷனால் வரும் தலைமுறையில் நாட்டின் மிகச்சிறந்த செஸ் வீரராக வரக்கூடிய வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் நாட்டை விட்டு செல்லுவதற்கு அனுமதித்து விட்டால், மிகச்சிறந்த திறமைசாலி ஒருவரை இழந்து விடுவோம் என்று அக்கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அலுவலகம், "ஒவ்வொரு விசா விஷயமும் அதற்கான தகுதிகளில் அடிப்படையில், குடிபுகல் விதிமுறைகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுகிறது," என்று தெரிவித்துள்ளது.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

Tag Clouds