2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் ஆலோசனை

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
 தலைமைச்செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், முதலீட்டாளர் மாநாட்டு அதிகாரி அருண்ராய் மற்றும் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 
 
2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு மூலம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அதிகளவிலான முதலீட்டை ஈர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
முன்னதாக அரசு தரப்பு கொள்கை விளக்க குறிப்பு  வெளியிடப்பட்டது. அதில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் செலவினங்களுக்காக ரூ.73 கோடி ஒதுக்கீடு
 
முதற்கட்ட செலவுகளுக்காக முகமை நிறுவனமான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு 1 கோடி ரூபாய் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், தென்கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு
 
மேலே குறிப்பிட்ட நாடுகள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்குண்டான வாய்ப்புகளை விளக்குவதற்கான கருத்தரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
கூட்டத்திற்கு முன்பாக முதலீடுகள் குறித்து நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜெர்மனி அரசின் ஜிஸ் அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் கோவை மண்டலத்திற்கான வளர்ச்சி நெறித்திட்டம் உருவாக்கப்படும்.
 
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு குறைந்த செலவில் தங்கும் விடுதிகள் கட்டப்படும். ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் மதுரை, தூத்துக்குடி, நெல்லை மண்டலங்களுக்கு வளர்ச்சி நெறித்திட்டம் உருவாக்கப்படும்.
 
முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த அதிகபட்ச கடன் உச்சவரம்பு ரூ. 5 கோடியாக உயர்த்தப்படும். அதிகபட்ச மானிய உச்சவரம்பு தற்போதுள்ள ரூ 25 லட்சமே தொடரும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

I am going to Delhi with a heavy heart - Chief Justice

கனத்த இதயத்துடன் சென்னையில் இருந்து டெல்லி செல்வதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்...

Rajasthan assembly election amit shah gaurav yatra

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக யாத்திரை பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ...

Health department Warning in delivery of the home

விபரீத முயற்சிகளில் ஈடுபடக் கூடாது வீடியோ பார்த்தோ திரைப்படங்களை பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் த...

A Man entered in kerala government house with knife in Delhi

டெல்லியில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தில் கத்தியுடன் உலா வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது....

Defamation in the Facebook

சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக வாலிபர் சங்கரலிங்கம் குவைத்திலிருந்து விமானம் மூலம் த...

Has Kamal rubbished Jayalalithaa?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை மறைமுகமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொச்சைப்படுத்தியதா...

BJP has created a state of crisis - Mamata

மத்தியில் ஆளும் பாஜக அரசு சூப்பர் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருப்பதாக மேற்குவங்க மாநில முதலமைச்சர்...