சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தாகில் ரமானி வரும் 12ல் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிபதியாக தால் ரமானி வரும் 12ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வந்தவர் இந்திரா பானர்ஜி. இவர், கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி ஏற்றார். இதனால், காலியாக இருந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் தாகில் ரமானி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த ஆணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தால் ரமானி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரும் 12ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். இவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

தாகில் ரமானி மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி பிறந்தார். 1982ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து மகாராஷ்டிரா மற்றும் கோவா பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். பின்னர், கடந்த 2001ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தாகில் ரமானி பதவி ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Statue Smuggling issue Government is guaranteed in the Supreme Court

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் அறநி...

Diplomacy of Edappadi Palanisamy

திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கும் களோபரச் சூழலில், ஜெயலலிதா நினைவு மண்டப சிக்கலை களைந்தது மு...

Karunanidhi final ritual arrangements intensified

உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கும் செய்வதற்கான ஏற்பாடுகள் சென்...

Karunanidhi was allowed to be buried in Marina - High Court

திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய  அனுமதித்து சென்னை உயர்நீத...

Karunanidhi demanded in the case of the Marina

திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தி...

CCTV can be used to block sand robbery: Chennai High Court

செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க சூரிய சக்தி மூலம் கண்காணிப்பு கேமிரா பொருத்த முடியுமா என சென்ன...