பரங்கிமலை விபத்து... தண்டவாளத்தை மாற்றி அமைக்க முடிவு

மின்சார ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பரங்கிமலை ரயில் நிலையத்தில் 4-வது தண்டவாளத்தை மாற்றி அமைக்க ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

St. Thomas Mount

சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையத்தில், கடந்த மாதம் 24ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக கடந்த 23ஆம் தேதியும் அதே இடத்தில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, ரயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், பரங்கிமலை ரயில் நிலைய 4-வது நடைமேடை அருகே உள்ள தடுப்பு சுவரை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்த மாதம் 30ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அப்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்திய பொதுமக்கள், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடை வழியாக தென்மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் செல்லும்போது இடையூறாக உள்ள தடுப்பு சுவர்களையும் அகற்றும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து கடந்த 6ஆம் தேதி பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார், 4-வது நடைமேடையில் இடையூறாக இருந்த தடுப்பு சுவரை சுமார் 30 அடி நீளத்துக்கு இடித்து அகற்றினர்.

ஆனால் 5 பேர் உயிரை பலி வாங்கி பரங்கிமலை ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் உள்ள தடுப்பு சுவரை அகற்றுவது சாத்தியம் இல்லை என்பதால், அதற்கு பதிலாக நடைமேடையின் முன்புறம் தண்டவாளம் அருகே உள்ள சுவரை உடைத்து, 4-வது தண்டவாளத்தை சில அடி தூரம் வரை தள்ளி அமைத்தால் இதுபோல் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என அதிகாரிகள் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.

இதற்காக 4-வது தண்டவாளம் ஓரம் உள்ள ஜல்லி கற்கள் அகற்றப்பட்டு நடைமேடையில் கொட்டப்பட்டு உள்ளது. விரைவில் 4-வது தண்டவாளம் மாற்றி அமைக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Electric trains will not run on EXpress train route anymore: Railways

சென்னையில் இனி எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்படாது என்றும், இதனை நிரந்தரமாக நிறு...

If the train is standing on the stairs Railway pass cancel

மின்சார ரயிலில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் மாணவர்களின் பாஸ் ரத்து செய்ய நடவடிக்கை எ...

Investigation on St. Thomas Mount Train accident

பரங்கிமலை ரயில் விபத்தில் 5 பேர் இறந்த சம்பவத்தில் மனித தவறா என்ற கோணத்தில் துறை ரீதியான விசாரணை நடந...

Announcement of financial assistance to 4 families of victims in train accident

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்....

4 people died after fall off from train in chennai

சென்னை பரங்கிமலையில், மின்சார ரயில் படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்த நான்கு பேர் மின்கம்பம் இடித்து...

Case demanding for reduction in metro Train fee

புறநகர் ரயில்களை விட 12 மடங்கு அதிகமாக 60 ரூபாய் வரை மெட்ரோ ரயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது....