தமிழ்(அ)ப்பாவுக்கு ஓர் இரங்கற்பா !

தமிழ்(அ)ப்பாவுக்கு ஓர் இரங்கற்பா !
---------------------------------------------
யாரும் அறியா அஞ்சுக‌த்துக்கு
மகனாய்ப் பிறந்து  ! !
 
பாரே அறியும் மகத்தான
தலைவனாய் உயர்ந்து ! !
 
மன்னவர் பலரை கண்ட 
சாம்ராஜ்யங்கள் முன்னே ! !
 
சாம்ராஜ்யங்கள் பல கண்ட 
ஒரே மன்னவன் நீர் தானே ! !
 
உலகத்துக்கு ஒரே இமயம் 
எத்துனை உள்ளங்களில் நீர் இமயம் ! !
 
வ‌ச‌ன‌த்தால் வ‌சிய‌ம் செய்தாய்
வசை பாடியோரும் உன்வசம் செய்தாய் ! !
 
ஆண்டவன் இல்லையென்று  
நாத்திகம் பேசினீரே அன்று ! !
 
பல உள்ளங்களை ஆண்டவனாய்
மாண்டு போனீரே  இன்று ! !
 
வெடி போல் வரும் விமர்சனங்கள் உன்
பொடி வைத்த பேச்சில் பொசுங்கிடுமே ! !
 
சிலப்பதிகாரத்தை எளிமையாய் சொன்ன
எழுத்துச்சிற்பியே
 
சிம்மக்குரலுக்கு எழுத்தால் சிகரம்தந்த
சிந்தனைச்சிற்பியே ! !
 
காற்றோடு கரைந்திட கற்பூரமா உன்புகழ்
காலம் கடந்த காவியமன்றோ உன்புகழ் ! !
 
நீர் தலைநிமிர்ந்து ஏற்றிய மூவர்ணக்கொடி
உமக்கு தலைகுனிந்து புகழ் பரப்புதே ! !
 
செப்புமொழி ஆயிரமாயினும் தமிழை 
செம்மொழியாக்கி ஆட்சி கொண்டாய் ! !
 
வெறும் மையால் இலக்கணம் பிறக்குமா ?.
நீ இல்லா வெறுமையில் இனி தமிழகம் தழைக்குமா?
 
மெரினா உன் விலாசமல்ல இனி 
மெரினாவுக்கே நீர் தான் விலாசம் ! !
 
- சு.சரவணக்குமார்

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

DMK Party members threatening says Traffic Ramaswamy

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கிய விவகாரத்தில், தமக்கும், வழக்கறிஞருக்கும் அக்கட்ச...

Dhanush support to actress Hansika

நடிகை ஹன்சிகாவின் 50-ஆவது படத்தின் தலைப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு துணைபுரிய இருக்கிறார...

DMK Chief Executive Committee emergency meeting date announced

திமுக தலைமைச் செயற்குழு அவசரக்கூட்டம் நடைபெறும் தேதி குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்...

Karunanidhi slapped simbhu for not showed him movie

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உரிமையுடன் என் பளார் என்று அறைந்தார் என்று சிம்பு உருக்கமாக தெரிவித்து...

MK Stalin inquired about the wounded

பொதுமக்கள் அஞ்சலிக்காக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அவருக்கு அஞ்சல...

Volunteers are tribute to Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் பொதுமக்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தி ...