தமிழக வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள்...? கமலின் அதிரடி பதில்!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப மக்கள் முடிவு செய்வார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan

விஸ்வரூபம்-2 திரைப்படம் தமிழகத்தின் குறிப்பிட்ட சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விஸ்வரூபம் -2 படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பு இருக்கிறது. ஒரு சிலர் இடைஞ்சல் செய்வது விளம்பரமாக முடியும் என்று நம்புகிறேன். அவர்களுக்கு நன்றி சொல்ல நேரமில்லை.

ஆனால் எங்களை வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். தமிழகத்திலும், ஆந்திராவிலும், மும்பையிலும் வடமாநிலலங்களிலும் பெரிய வரவேற்பு தந்து உள்ளனர். இந்த வெற்றியை பார்க்க ரொம்ப நாள் காத்திருந்தோம்.

மய்யத்தின் பாடல்களை இனி எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும். திரைக்கும் சம்பந்தப்படுத்த மாட்டேன். ஆனால் எந்த மேடை கிடைத்தாலும் பயன்படுத்துவேன். கதையில்லை மய்யத்தை கலக்க மாட்டோம். மக்கள் நீதி மய்யம் தனது பணியை செய்து கொண்டே இருக்கும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யார் நிரப்புவர்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். மக்களை நோக்கி தான் பயணம் செய்துக் கொண்டு இருக்கிறோம். மக்களின் நலனுக்காக என்ன செய்ய வேண்டுமோ அது எங்கள் பணியும் கடமையும் ஆகும்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து ஆலோசித்து தேவைப்பட்டால் தயாரவோம்." எனக் கூறினார்.

Recent News

Most Read News

Tag Clouds

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Court notice to Kamal Haasan

விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க நடிகர் கமல்ஹாசன...

Pyaar prema kadhal movie competitively releasing on Vishwaroopam 2 release date

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும் ...

Kamal Advised Party administrators not to use party symbol, flag for Vishwaroopam 2

விரைவில் வெளியாக இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளின்போது கட்சியின் சின்னம், ...

Vishwaroopam 2 movie third single track release

மிகுந்த எதிர்பார்ப்புடன் கமல் நடித்த விஸ்வரூபம் 2 ஆம் பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்...

Kamal Haasan rushed to Gopalapuram to meet Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க கோபாலபுரத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் ...

Actor Kamalhassan and Actress ShruthiHassan participating in India independence day celeberation in America

இந்த வருடம் இந்தியா சார்பில் நடிகர் கமலஹாசனும், அவரின் மகள் ஸ்ருதிஹாசனும் பங்கேற்கிறார்கள்....